×

ஆமாம்… இது என்னோட போஸ் ஆச்சே! மோடிக்கு ஞாபகப்படுத்திய ஜான் சீனா

பிரதமர் மோடி அரசு பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து சென்று உள்ளார். அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் சார்பில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அவர்களுக்கு வைர கல், சந்தன பெட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பிரதமர் மோடி பரிசளித்தார். இந்த பயணத்தின்போது அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனுடன் நிற்கும் மோடி, தனது 5 விரல்களை முகத்தின் முன் காட்டி இருப்பார். இந்த புகைப்படத்தை பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். மோடி காட்டிய போஸ் ஜான் சீனாவின் ‘டிரேட் மார்க்’ போஸ். இப்போது அரவரது போசும், மோடி கொடுத்த போசும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஆமாம்… இது என்னோட போஸ் ஆச்சே! மோடிக்கு ஞாபகப்படுத்திய ஜான் சீனா appeared first on Dinakaran.

Tags : John China ,Modi ,United States ,Egypt ,Chancellor ,Bidon ,White House ,
× RELATED மோடி யாரென்றே தெரியாது!: அமெரிக்காவில்...